வனிதா விஜயகுமார் மகளாச்சே! உயிரே உயிரே தப்பிச்சு எப்டியாவது ஓடிவிடு!

0
366

பிக் பாஸ் ஜோவிகாவை எடிட் செய்து இணையவாசிகள் காணொளி வெளியிட்டு வருகின்றனர். வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

போட்டியாளர்களை பெயர் சொல்லி அழைப்பது, போல்டாக பேசுவது, பாயின்ட்டை பிடித்து பேசி மடக்குவது என மாஸ் காட்டுகிறார்.

கூல் சுரேஷிடம் மேக்கப் போடலைன்னாலும் பெண்கள் அழகு தான் என்றும் அது அவர்கள் தனிப்பட்ட விஷயங்கள் என பேசி அவரை திணறடித்திருந்தார்.

இந்நிலையில், அக்‌ஷயா உதயகுமாரிடம் பிரதீப் ஆண்டனி சண்டை பொடுவது போல பேசிக் கொண்டிருக்கும் போது அதனை பார்த்த ஜோவிகா அங்கே போனால், தேவையில்லாமல் நம்ம பக்கம் திரும்பி விடுவார் என நினைத்து அப்படியே பின்னோக்கி சென்று அங்கிருந்து சென்ற காட்சியை பார்த்த ரசிகர்கள் அதை மட்டும் எடிட் செய்து வைலராக்கியுள்ளனர்.

குறித்த காணொளியில் “உயிரே உயிரே தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு” என்ற வடிவேலு டயலாக்கை போட்டு அலப்பறையை கிளப்பி வருகின்றனர். மேலும் ஜோவிக்காவின் ரசிகர்கள் வனிதா மகள் என்றால் சும்மாவா என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.