நோபல் பரிசுக்காக ஏங்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

0
40

இந்தியா- பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

அவருக்கு சில நாடுகளும் ஆதரவு தெரிவித்து பரிந்துரைத்தன. ஆனால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்தநிலையில் அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்க உள்ள நிலையில் அதுகுறித்து ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த டிரம்ப், “நாங்கள் 7 போர்களை தீர்த்து வைத்தோம். 8-வது போருக்கு நாங்கள் தீர்வு காண நெருங்கிவிட்டோம். வரலாற்றில் யாரும் இவ்வளவு போர்களை தீர்த்து வைத்ததாக நான் நினைக்கவில்லை.

ஆனால் ஒருவேளை அவர்கள் (நோபல் குழு) அதை எனக்குக் கொடுக்காததற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்” என்றார். இதற்கிடையே வெள்ளை மாளிகை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் டிரம்ப்பின் படத்தை “அமைதித் தலைவர்” என்ற தலைப்பில் பகிர்ந்து உள்ளது.