தேர்தல் நெருங்கும் வேளையில் இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரமுகர்: அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம்

0
136

சமுத்திரங்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க பதில் உதவி செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் இன்று இலங்கைக்கு விஐயம் செய்யவுள்ளார்

குறித்த பயணத்தின் போது, இயற்கை மற்றும் கடல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் காற்று மாசுபாடு, காலநிலை நெருக்கடி, காடழிப்பு, இயற்கை குற்றங்கள், சிவில் மற்றும் வணிக விண்வெளி நடவடிக்கைகள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் நிலையான பொருளாதாரம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.

இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இலங்கையில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் ஏனையோரை சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.