வெளிநாட்டு Wi-Fi Routersகளுக்கு அமெரிக்காவில் தடை

0
23

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடும் என்ற காரணத்தினால் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அனைத்து நுகர்வோர் தர Wi-Fi Routers களுக்கு தடை விதிப்பதாக அமெரிக்க கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அசெம்பிள் செய்யப்படும் அல்லது வடிவமைக்கப்படும் அனைத்து புதிய ரக Wi-Fi Routersகளுக்கு இந்தத் தடை பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க சந்தையில் முன்னணியில் உள்ள TP-Link, Asus, Netgear மற்றும் D-Link உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் தயாரிப்புகள் வெளிநாடுகளிலேயே உற்பத்தி செய்யப்படுவதால் இந்த முடிவு சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் இதிலிருந்து விலக்கு கோரி விண்ணப்பிக்க முடியும் என்றாலும் இதுவரை எந்தவொரு நிறுவனத்திற்கும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. “வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் Wi-Fi Routers ஏற்றுக்கொள்ள முடியாத தேசிய பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே அவற்றை அமெரிக்க கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணைக்குழுவினால் தடை செய்யப்பட்ட பட்டியலில் (Covered List) சேர்த்துள்ளோம்” என அமெரிக்க கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணைக்குழு தலைவர் பிரெண்டன் கார் (Brendan Car) தெரிவித்துள்ளார்.