இலங்கையில் இருந்து வெளியேறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

0
26

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஜூலி சங் (Julie Chung) எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கான தூதுவராகப் பொறுப்பேற்ற அவர் இலங்கையின் மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில் அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

அவர் தனது பிரியாவிடை செய்தியில் தனது பணிக் காலத்தின் முதல் நாளிலிருந்தே அமெரிக்காவின் நலன்களை மேம்படுத்துவதும், அமெரிக்க மக்களுக்குப் பயனுள்ள உறவைக் கட்டியெழுப்புவதுமே தனது பிரதான நோக்கமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரமான, திறந்த மற்றும் பாதுகாப்பான இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்துவதற்காக இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற முடிந்ததாக ஜூலி சங் (Julie Chung) சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் மாற்றங்களின் போது ஜூலி சங் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.