“இனப்படுகொலைக்கு துணை போக மாட்டேன்” கோஷம் எழுப்பியவாறு தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர்

0
173

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க விமானப்படை வீரர் ஆரோன் புஷ்னெல் (Aaron Bushnell) கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தியும் காஸாவில் இனப்படுகொலையை நிறுத்துமாறு கோரியும் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக தீக்குளித்தார்.

25 வயதான ஆரோன் புஷ்னெல் அதனை நேரடியாக ஒளிபரப்பவும் செய்தார்.

பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும், இனப்படுகொலைக்கு துணை போக மாட்டேன் என கோஷம் எழுப்பியவாறு திடீர் என அவர் தீக்குளித்தார்.

தீக்காயங்களுக்குள்ளான அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.