தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் ஊர்திப் பவனி!

0
78

வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் பிரித்தானியாவில் ஊர்திப்பவனி முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதவரளித்து பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புக்களினால் ஊர்தி எழுச்சிப் பயணம் ஒன்று நேற்றையதினம்(15) இடம்பெற்றது.

குறித்த ஊர்தி எழுச்சிப்பயணமானது, “நாமும் இணைந்தால் பலமே” என்ற தொனிப்பொருளில் தியாக தீபம் திலீபன் நோன்பிருந்த ஆரம்ப நாளில் (15) முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு கோரும் குறித்த பயணமானது பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த எழுச்சிப் பயணமானது ராக்ஸெத் பொழுதுபோக்கு மைதானத்தில் “Roxeth recreation ground Ha2 8LF South Harrow” இப்பயணம் நிறைவடைந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளையின் முக்கியஸ்தர் கேதீஸ்வரன் தலைமையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.