நாடாளுமன்றில் தமிழ் எம்.பி களால் சலசலப்பு; வேடிக்கை பார்த்த பிள்ளையான்

0
200

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஏனைய தமிழ் எம்.பிக்களையும் இணைத்து இன்று (6) சபையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்.

மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வழங்க கோரி அவர்கள் நாடாளுமன்றில் கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

நாடாளுமன்றில் தமிழ் எம்.பி களால் சலசலப்பு; வேடிக்கை பார்த்த பிள்ளையான் | Chaos By Tamil Mps In The Parliament

இன்று வெள்ளிக்கிழமை (6) காலை நாடாளுமன்றம் கூடிய போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார்.

இதன் பின்னர் வேண்டும் வேண்டும் எமது நிலம் எமக்கு வேண்டும், அழிக்காதே அழிக்காதே தமிழர்களின் நிலங்களை அழிக்காதே என்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை கைலேந்திந்தி நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை  சபையில் அமர்ந்திருந்த பிள்ளையான்,  சாணக்கியன் உள்ளிட்டோரின்  ஆர்ப்பாட்டத்தை சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

நாடாளுமன்றில் தமிழ் எம்.பி களால் சலசலப்பு; வேடிக்கை பார்த்த பிள்ளையான் | Chaos By Tamil Mps In The Parliament