‘தளபதி 69’ பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்

0
101

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 69 ஆவது திரைப்படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே, போபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இத் திரைப்படம் அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

விஜய்யின் கடைசிப் படம் எனக் கூறப்படும் இத் திரைப்படம் அரசியல் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக் கூறப்படுகிறது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி டிசம்பர் 31 ஆம் திகதி இரவு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.