பிரதமருக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டப் பேரணி!

0
881

மட்டக்களப்பு போராட்ட களத்தின் பத்தாவது நாளான இன்று வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

இன்று மாலை வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கையில் தீப்பந்தங்களையும் பதாதைகளையும் ஏந்தியவாறு அரசுக்கு எதிராக கோசமிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேரணியாக பல்கலைக்கழக மாணவர்கள் செங்கலடி சந்தி வரை சென்றனர்.

இதன்போது செங்கலடி பிரதான வீதியை முற்றுகையிட்டு சுமார் 2 மணி நேரம் போராட்டம் இடம்பெற்றது.

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் கோசமிட்டு போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.