இரண்டாவது திருமணம் குறித்து எதிர்பாராத பதில்: மறுமணம் குறித்து பேசிய நடிகை சமந்தா

0
170

தென்னிந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சமந்தா. அவரும் நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து 2021 அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்து செய்தனர்.

இந்த நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கேள்விக்கு சமந்தா பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் மறுமணம் செய்வது பற்றி யோசித்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினார்.

Oruvan

அதற்கு யாரும் எதிர்பார்த்திராத வகையில் வித்தியாசமான பதிலை அளித்தார். “புள்ளி விவரத்தின்படி இது மோசமான முதலீடாக அமையக்கூடும்” என்று ஸ்மைலி எமோஜியுடன் பதிலை பகிர்ந்தார். அதாவது அந்த ரசிகர் விவாகரத்து குறித்த புள்ளிவிபரத்தை வெளியிட்டதை பார்த்து அதற்கு ஏற்றார் போல சமந்தா பதில் கூறினார்.

தொடர்ந்து 2023ஆம் ஆண்டை மோசமான ஆண்டாகக் கருதுவதாகவும் வரும் ஆண்டில் தனது உடல் நிலையில் கவனம் செலுத்துவேன் எனவும் தெரிவித்தார் சமந்தா.