இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடலுக்கடியில் இணைக்கப்படும் குழாய்!

0
246
Metal water pipes construction site

இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான எரிபொருள் விநியோக குழாய் திட்டத்திற்கான செயற்பாட்டு ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

இந்த செயற்பாட்டு ஆய்வை ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

இவ்வறிவிப்பை தொடர்ந்து அதற்கான ஒத்துழைப்பை முழுமையாக வழங்குவதாக ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க இந்தியாவிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் தென் பகுதியின் நாகப்பட்டினத்தை அண்மித்த பிரதேசத்திலிருந்து இலங்கையை நோக்கி எரிபொருள் விநியோகக் குழாய் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

கடலுக்கு அடியில் முன்னெடுக்கப்பட உள்ள இந்தக் குழாய் திட்டமானது இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கை நோக்கி முதல் கட்டமாக விஸ்தரிக்கப்பட உள்ளது.