யாழ்ப்பாணம் செம்மணியில் மனிதப் புதைகுழியில் கண்டுப்பிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
செம்மணியில் மனிதப் புதைகுழியில் கண்டுப்பிடிக்கப்பட்ட எச்சங்கள் இலங்கையில் தமிழர்கள் மீது அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட அட்டூழியங்களை நினைவூட்டுகிறது என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த கொடூரமான அட்டூழியத்திற்கு சர்வதேச பங்காளிகளுடன் சேர்ந்து முழுமையான விசாரணைக்கு உட்படுத்த பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்துவதாக வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மிக்கு உமா குமரன் கடிதம் எழுதியுள்ளார்.