உக்ரேனியர்கள் முதல்முறையாக இந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
இதற்கு முன்னர் உக்ரேனிலும் ரஷ்யாவிலும் ஜனவரி 7ஆம் திகதி கிறிஸ்மஸ் அனுசரிக்கப்பட்டது.
உக்ரேனியர்கள் அனைவரும் ஒன்றாக, ஒரே திகதியில், ஒரு குடும்பமாக கிறிஸ்மஸ் கொண்டாடுவோம் என்று உக்ரேனிய ஜனாதிபதி (Volodymyr Zelensky) தமது கிறிஸ்மஸ் தினச் செய்தியில் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜுலை மாதம் அவர் கிறிஸ்மஸ் பண்டிகையை டிசம்பர் 25 ஆம் திகதிக்குச் சட்டபூர்வமாக மாற்றினார்.
இது ரஷ்யக் கலாசாரத்தைக் கைவிட அது வழிவகுக்கும் என்று அவர் கூறியிருந்தார். இதற்கு உக்ரேனியர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததிலிருந்து ரஷ்யா, சோவியத் யூனியன் ஆகியவற்றின் தாக்கத்தை அகற்றும் முயற்சியில் உக்ரேன் இறங்கியுள்ளது.




