போரை கைவிட்டு துருக்கி, சிரியாவுக்கு உதவ சென்ற உக்ரைன் வீரர்கள்!

0
415

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவுவதற்காக உக்ரைன் போர் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தால் 24 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

போரை கைவிட்டு துருக்கிக்கு உதவச் சென்ற உக்ரைன் வீரர்கள்! | Ukrainian Soldier Gave Upwar Help Turkey

இந்நிலையில் அங்கு இரவு பகலாக மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் பல்வேறு நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு உதவும் வகையில் தங்கள் நாட்டு மீட்புப் படையினரை அனுப்பி வைத்துள்ளனர்.

உக்ரைனில் போர் இன்னும் முடிவுக்கு வராத சூழலிலும் போர்முனையில் இருந்த 88 வீரர்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிக்காக துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.