‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தல் ஆரம்பம்

0
313

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது.

பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நல்லூரில் உண்ணாவிரத்த்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.