சூரன் போரில் வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் படுகாயம்!

0
362

சூரன் போரில் வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை கிழக்கு, சித்தங்கேணி மற்றும் வட்டுக்கோட்டை மேற்கைச் சேர்ந்த இருவரே வாள் வெட்டில் படுகாயமடைந்துள்ளனர்.

யாழில் சூரன் போரில் வாள் வெட்டு! - இருவர் படுகாயம் | Sword Cutting Attack In Jaffna

இளைஞர் குழுக்களுக்கிடையில் தர்க்கம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கரத்தை, பங்குருமுருகன் ஆலயத்தில் நேற்று மாலை சூரன் போர் திருவிழா இடம்பெற்றது.

அதன்போது, ஆலயத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் தர்க்கம் ஏற்பட்டது.

தர்க்கம் கைக்கலப்பாக மாறி வாள் வெட்டில் முடிவடைந்தது. சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.