அமெரிக்காவின் அரசியல் எதிரிகளாக கருதப்படும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் நண்பர்களாக இருந்து விடுமுறையை இணைந்து கொண்டாடுவது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
குறித்த வீடியோவில்,
வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் உணவு சாப்பிட்டப்படியே நடந்து முடிந்த தேர்தல் தொடர்பில் நீண்டநாள் நண்பர்கள்போல சகஜமாக பேசுகிறார்கள். பின்னர் நாம் ஒருவேளை இந்த இடத்தில் இல்லாமல் இருந்தால் என யோசிக்கிறார்கள்.
அப்போது அவர்கள் இருவரும் விடுமுறையை கொண்டாடி ஐஸ்கிரீம் சுவைப்பது, குதிரை சவாரி செய்வது, கோல்ப் விளையாடுவது, இருசக்கர வாகனம் ஓட்டுவது, ஆற்றில் மீன்பிடிப்பது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது என ஈடுபடுகிறார்கள்.
AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி ஒருநாள் கூட ஆகாத நிலையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.