நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்தை தொடர்ந்து அந்நாட்டின் மீது ரஷ்யா படை எடுத்துள்ளது.
இந்நிலையில் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ இராணுவ கூட்டணியில் இணைவது பற்றி பேசி வருகின்றன .
இதற்க்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கனடா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.
இது குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் டுரூடேவ் கருத்து தெரிவிக்கையில்” நேட்டோவில் சேருவது குறித்து சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் விருப்பம் காட்டுவதாக உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. அந்த இரு நாடுகளின் முடிவிற்க்கும் கனடா நிச்சயம் ஆதரவு அழிக்கும்” என்றும் கூறியுள்ளார் .