அன்றாடம் உலகில் நாம் வியக்கும்விதமாக பல சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் கடந்த 100 ஆண்டுகளில் முதன் முறையாக இரண்டு வெவ்வேறு உயிரினங்கள் ஒரே உயிரினமாக ஒன்றிணைந்துள்ளன.
இந்த நடைமுறையை ஆய்வாளர்கள் ‘பிரைமரி எண்டோசைம்பியோசிஸ்’ என குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் கடலில் இருக்கும் ஒரு வகை பாசிக்கும் பக்டீரியாவுக்கும் இடையில் இந்தப் பரிமாண மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆய்வு மூன்றாவது முறையாக செய்யப்பட்டது. முதல் முறை இந்த எண்டோகாண்ட்ரியா நிகழ்வு நடந்தபோது ‘மைட்டோகாண்ட்ரியா’ என்று சிறிய உயிரினம் உருவாகியது. இது பல உயிர்களின் தோற்றத்துக்கு வழிவகுத்தது.
இரண்டாவது முறை நடந்தபோது சில தாவரங்களின் தோற்றத்துக்கு வழி வகுத்தது. தற்போது இது மூன்றாவது தடவையாகும். குறித்த செயல்பாட்டில் பாசிக்கள் ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் மற்றும் பாதுகாப்பை வழங்கும். அதற்கு மாற்றாக பக்டீரியாக்கள் பாசியுடன் இணையப் போகிறது.

கடந்த காலங்களில் பாசிகளால் சில செயல்பறைகளை செய்ய முடியாமல் இருந்தது. ஆனால் இந்த செயல்பாட்டின் பின்னர் இதில் மாற்றம் ஏற்படும்.
இந்த செயன்முறையின் பின்னர் உலகில் பலவிதமான மாற்றங்கள் நிகழவுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக விவசாய நடவடிக்கையில் மிகப்பெரியய தாக்கத்தை ஏற்படுத்தும்.
