இஸ்ரேலில் கொல்லப்பட்ட இரண்டு கனடியர்கள்

0
206

அண்மையில் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரண்டு கனடியர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

இஸ்ரேலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த வேளையில், ஹமாஸ் போராளிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் இரண்டு கனியர்கள் உயிரிழந்தனர்.

இஸ்ரேலில் கொல்லப்பட்ட இரண்டு கனடியர்கள் | Two Canadians Killed By Hamas

வான்கூவாரைச் சேர்ந்த 22 வயதான பென் மிஸ்ராஜி  மற்றும் ஒன்றாரியோவைச்  சேர்ந்த 33 வயதான அலெக்சாண்டர் லுக் ஆகிய இருவரும் இவ்வாறு உயிரிழந்திருந்தனர்.

இஸ்ரேலில் கொல்லப்பட்ட இரண்டு கனடியர்கள் | Two Canadians Killed By Hamas

இஸ்ரேலில் கொல்லப்பட்ட இந்த இரண்டு கனடியர்களுக்காகவும் நினைவஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளது. கனடாவில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பலஸ்தீன போரில் பாதிக்கப்பட்ட கனடியர்களின் விபரங்கள் இன்னமும் முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.