சுனாமியின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த சுனாமி பேபி

0
281

கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் கடந்துள்ளன. குறித்த பேரழிவில் சிக்குண்டு 35,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் 5000க்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் சுனாமி பேபி என அழைக்கப்படும் அபிலாஷ் ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கு இன்று (26.12.2023) அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடத்தில் உள்ள அவரது  இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் பெற்றோருடன் இணைந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள க.பொ.த உயர்தரத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவித்தார்.

சுனாமியின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த சுனாமி பேபி | Tsunami Baby Pays Tribute To The Victims
சுனாமியின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த சுனாமி பேபி | Tsunami Baby Pays Tribute To The Victims