அமெரிக்காவிற்குப் பெரும் பணமதிப்புடைய ஒரு ‘விலைமதிப்பற்ற பரிசை’ ஈரான் வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள வியக்கத்தக்க முன்னேற்றம் குறித்து தெளிவுப்படுத்தினார். ஈரான் பேச்சு வார்த்தையாளர்கள் எங்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு மிகப்பரிசுத்தமானது” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் கருத்துப்படி, இந்தப் பரிசு நேரடியாக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் தொடர்பானது. இருப்பினும், அந்தப் பரிசு என்ன என்பது குறித்த துல்லியமான விபரங்களை ட்ரம்ப் தற்போது வெளியிடவில்லை. ஈரான் எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள மிகத் தீவிரமான ஆர்வத்துடன் இருக்கிறது என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.



