மலேசியாவில் இடம்பெறவுள்ள ஆசியன் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அழைப்பு விடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
அதிகாரபூர்வமாகத் அமெரிக்க ஜனாதிபதிக்கு தாம் அழைப்பு அனுப்பியிருப்பதாக இன்று மலேசியப் பிரதமர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
இம்முறை ஆசியன் உச்சிமாநாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள மலேசியா ஒக்டோபரில் அந்த மாநாட்டை நடத்தவுள்ளது. ஆசியன் உச்சி மாநாட்டின்போது கிழக்காசிய உச்சி மாநாடும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.