ட்ரம்ப் நடத்திய ஏல விற்பனை; 25 கோடிக்கு விற்க்கப்பட்ட இயேசு கிறிஸ்​து​வின் ஓவி​யம்

0
47

அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணம், பாம் கடற்​கரை பகு​தி​யில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்​புக்கு சொந்​த​மான கேளிக்கை விடுதியில் ட்ரம்​ப் புத்​தாண்டை கொண்டாடினார். புத்​தாண்டு விழா​வின் ஒரு பகு​தி​யாக பெண் ஓவியர் வனேசாரோராபுவேனா, இயேசு கிறிஸ்​து​வின் ஓவி​யத்தை அங்​கேயே வரைந்​தார்.

முடிவில் ட்ரம்ப் அந்த ஓவி​யத்தை ஏலம் விட்​ட நிலையில் ரூ.2 கோடி​யில் ஏலம் தொடங்​கியது. இறு​தி​யில் பிரபல தொழில​திபர் ஒரு​வர் ரூ.25 கோடிக்கு இயேசுவின் ஓவி​யத்தை ஏலம் எடுத்​தார். இந்தப் பணம் சென்ட் ஜுட் குழந்​தைகள் நல மருத்துவமனைக்கும், உள்ளூர் பொலிஸ் நிலைய மேம்​பாட்​டுக்​கும் பகிர்ந்து அளிக்​கப்​படும் என்று ட்ரம்ப்​ அறி​வித்​துள்ளார்.