லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் Axiata Arena Bukit Jalil, KUALA LUMPUR உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதில், மொத்தமாக 16 ஆயிரம் பேருக்கான இருக்கைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ இன்னும் 67 நாட்களில் வெளியாகவுள்ளது. இதனால், ரசிகர்கள் தளபதி67 ( #Thalapathy67) என்ற ஹாஷ்டேக்கை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் லியோ இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக தயாரிப்பாளர் லலித், நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் மலேசியாவுக்கு சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
