வெளிநாட்டிலிருந்து நன்றி கூறி காணொளி வெளியிட்ட த்ரிஷா!

0
209

நடிகை த்ரிஷா ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி கூறி வெளியிட்ட காணொளி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு த்ரிஷா நடிப்பில் தி ரோட் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சணங்களை பெற்று வருகின்றது.

அருண் வசீகரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் உள்ள த்ரிஷா அங்கிருந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து காணொளி வெளியிட்டுள்ளார்.