பொதுத் தேர்தலில் களமிறங்கும் திருநங்கை!

0
115

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார். இவர் நடைபெறவுள்ள பொதுதேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றனது.

இந்நிலையில் பொதுத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நன்றி தெரிவித்துள்ள நிமேஷா இலங்கையில் தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்ற வரலாற்றினை தான் படைத்திருப்பதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.