புத்தாண்டில் சுவிட்சர்லாந்தில் பலரின் உயிரை பறித்த அசம்பாவிதம்; காரணம் வெளியானது

0
78

2026 புத்தாண்டு நாளில் சுவிட்சர்லாந்தில் பாரிய தீப்பரவலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீ விபத்துக்கு மெழுகுவர்த்தி மற்றும் ஷாம்பெயின் போத்தல்கள் காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவித்துள்ளன.

கிரான்ஸ்-மொன்டானாவிலுள்ள உணவகத்துடன் இணைந்த மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் விபத்து நடந்த நேரத்தில் 400க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிற நிலையில் இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.