மண்சரிவு காரணமாக போக்குவரத்து தடை: பொதுமக்களுக்கு வேண்டுகோள்

0
321

கண்டி – மஹியங்கனை வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு காரணமாக வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாற்று வீதி
உன்னஸ்கிரிய பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அதனை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.