திருகோணமலையில் முன்னெடுக்கப்படவுள்ள சுற்றுலா அபிவிருத்தி திட்டம்!

0
196

நகர அபைிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்பிற்கமைய திருகோணமலை தம்புள்ளை நகரங்களை மையமாகக் கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் நிலையான நகர அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படை திட்டமிடல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதுடன் தனியார் முதலீட்டாளர்களும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிக்கப்படுவதுடன் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் முன்னெடுக்கப்படவுள்ள சுற்றுலாத்துறை மேம்பாட்டுத் திட்டம்! | Tourism Development Project In Trincomalee

 ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் வசதி

மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் வசதிகளின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மேலும் திருகோணமலை நகரை மையமாகக் கொண்ட இத்திட்டத்தின் கீழ் மேலும் ஆறு உப திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் முன்னெடுக்கப்படவுள்ள சுற்றுலாத்துறை மேம்பாட்டுத் திட்டம்! | Tourism Development Project In Trincomalee

அத்தோடு திருகோணமலை நகர மையக் கரையோரம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தேவையான உட்கட்டமைப்புகள் அபிவிருத்தி செய்யப்படும்.

மேலும் திருகோணமலைக் கோட்டையை புனரமைத்தல், கிண்ணியா வெந்நீர் ஊற்றுகளை பாதுகாத்தல் மற்றும் அந்த பகுதிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தல் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.

திருகோணமலையில் முன்னெடுக்கப்படவுள்ள சுற்றுலாத்துறை மேம்பாட்டுத் திட்டம்! | Tourism Development Project In Trincomalee

மற்றும் பழமையான கச்சேரி கட்டிடத்தை புனரமைத்து உற்துறைமுக வீதியில் அதிகார சபைக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் முதலீட்டார்களை ஊக்கு வித்து உணவகங்கள் கட்டுவதற்காகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக புராதன கட்டிடங்களை புனரமைக்கும் போது அவற்றின் தொன்மைக்கு சேதம் ஏற்படாத வகையில் இது தொடர்பான புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.