இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் 2012 ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்த ஆயிஷா அவுஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். தொடர்ந்து இதையடுத்து டெல்லி நீதிமன்றத்தில் தமக்கு விவகாரத்து வேண்டும் என தவான் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் டெல்லி குடும்ப நீதிமன்றம் ஷிகர் தவான் மற்றும் அவரைப் பிரிந்துள்ள மனைவி ஆயிஷாவுக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது.
மனுதாரருக்கு (ஷிகர் தவான்) ஆயிஷா செய்த கொடுமையின் அடிப்படையில் அவர் விவாகரத்து பெற உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

தவானை மன ரீதியாக துன்புறுத்தி சித்ரவதை செய்த ஆயிஷா அவரது பணத்தில் அவுஸ்திரேலியாவில் தன் பெயரில் சொத்துக்களை வாங்கியதாக புகார் கூறப்படுகிறது.
ஷிகர் தவானின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் அங்கம் வகிக்கும் ஐபிஎல் அணி நிர்வாகத்துக்கு செய்திகள் அனுப்பியதாகவும் ஆயிஷா மீது குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும் ஷிகர் தவானின் மகன் ஸோராவர் ஒவ்வொரு ஆண்டும் பாதி விடுமுறை நாட்களை தவான் மற்றும் அவரது குடும்பத்தினருடன் செலவிடும் வகையில் மகன் ஸோராவரை இந்தியாவுக்கு அழைத்துவர வேண்டும் என்றும் ஆயிஷாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.