சென்னை – ஆவடி திருமுல்லைவாயலில் பகுதியில் VGN Stanford அப்பார்ட்மெண்ட் மொட்டை மாடியில் சிறிய குழந்தையொன்று தவறி விழுந்து காப்பற்றப்படும் காணொளியொன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
மொட்டை மாடியின் கூரை போன்ற அமைப்பில் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை குடியிருப்பாளர்கள் மிகவும் நுட்பமான முறையில் காப்பாற்றியுள்ளனர்.
குழந்தைக்கு ஏதெனும் ஆபத்துகள் நிகழாமலிருக்க வேண்டும் என்று பெரிய படுக்கை விரிப்பையும் பலர் இணைந்து பிடித்துக்கொண்டு காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதையும் காணொளியில் காணக்கூடியதாக இருந்தது.
குழந்தையை காப்பாற்றிய குடியிருப்பாளர்கள்
உயிரைப் பணயம் வைத்து தக்க நேரத்தில் சமயோசிதமாக செயல்பட்டுக் குழந்தையை பத்திரமாக மீட்ட குடியிருப்பாளர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4ஆவது மாடியில் வெங்கடேஷ் – ரம்யா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களது 7 மாத குழந்தை அடுக்குமாடி குடியிருப்பின் 2ஆவது மாடி பால்கனி தகர ஷீட்டில் தவறி விழுந்தது.

4ஆவது மாடி பால்கனியில் நின்றபடி குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தாயின் பிடியில் இருந்து துள்ளி குழந்தை கீழே விழுந்ததாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் குறித்த செய்தியில்,
குழந்தையின் கை மற்றும் கால் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தையை உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெற்றோரின் அலட்சியம்
சிறுவர்களுக்கு பாதுகாப்பு என்பது, முதலில் பெற்றோரால் வழங்கப்படவேண்டிய ஒன்று. ஆனால், பாதுகாப்பை வழங்க வேண்டிய பெற்றோரே இவ்வாறு அலட்சியமாக நடந்துகொள்கின்றமையானது மிகவும் வேதனைக்குரியது.
மேலும் இவ்வாறு ஆபத்தான சூழ்நிலையில் குழந்தைகள் சிக்குண்டு உயிரிழப்புகள் பதிவாகிய சம்பவங்களும் ஏராளம். இதற்கு முழு காரணம் பெற்றோரின் அலட்சியம் என்றே கூறவேண்டும்.
அந்த வகையில் குடியிருப்பாளர்களை சமூக வலைத்தளங்களின் வாயிலாக அனைவரும் பாராட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.