இன்றைய ராசிபலன் (20 மே 2022)

0
701

​மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். வேலை மற்றும் குடும்பம் என எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியான, நன்மை கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று பணியிடத்தில் பாதிப்புகளைத் தடுக்க கவனமுடன் செயல்படவும்.

இன்று மகிழ்ச்சியான மனநிலை இருக்கும், குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். இன்று உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் திறமையின் முழு பலனையும் பெறுவீர்கள். பண ஆதாயம் பெறக்கூடிய நாள். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

​ரிஷபம்

ரிஷப ராசிக்கு குடும்ப வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும்.

நீங்கள் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், குடும்பம் அல்லது நண்பருடன் பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். உங்கள் குடும்ப தேவைகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்கு இன்று பிற்பகல் வரை சந்திராஷ்டமம் உள்ளது. அதனால் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்கள், முதலீடுகள் செய்ய வேண்டாம்.

குடும்பம், அலுவலகம் என எதுவாக இருந்தாலும் உங்கள் பேச்சில் நிதானத்துடன் இருங்கள். உழைப்புக்கேற்ற நல்ல லாபகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் துணையாக இருக்கும் மங்களகரமான சுபவேலைகளில் பங்கேற்பீர்கள். பேச்சு இனிமையாக இருக்கும்., இதன் காரணமாக மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தால் உங்கள் வேலையை வெற்றிகரமாகச் செய்துமுடிப்பீர்கள். நல்லவர்களின் தொடர்பு அதிகரிக்கும். அவர்கள் வேலையில் வெற்றியை அடைய உங்களுக்கு உதவுவார்கள். பணியிடத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

​சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மறக்க முடியாத நாளாக இருக்கும் என்கிறார் விநாயகர். இனிய பேச்சாலும், புத்திசாலித்தனத்தாலும் பணியில் வெற்றி பெறுவீர்கள். இன்று வேலைக்கு சிறந்த நாளாக இருக்கும். கோர்ட் சம்மந்தமான விவகாரத்தில் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.

​கன்னி

கன்னி ராசிக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவழிப்பீர்கள், பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்திலும் நல்ல சாதகமான நிலை காணப்படும். பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. இன்று நீங்கள் நல்லவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வீர்கள், அவர்கள் வேலையில் வெற்றியை அடைய உங்களுக்கு உதவுவார்கள்.

​துலாம்

துலாம் ராசிக்கு இன்றைய நாள் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள். மன தைரியம் இழந்து காணப்படுவீர்கள். பணியிடத்தில் கடினமான சூழல் நிலவும். மனைவியுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும். வணிகம் சார்ந்த நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். பணம் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். கவனமான செயல்பாட்டால் அதிர்ஷ்டம் சில சூழல் உங்களுக்கு அமையும்.

​தனுசு

தேவையில்லாத அலைச்சல் ஏற்படக்கூடும். தூரப் பயணங்களை தள்ளி வைப்பது நல்லது அதிலும் குறிப்பாக வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம்.

தொழில் வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருந்தாலும் தேவையில்லாத அலைச்சல் வேலையாட்களின் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால் வேலைப்பளு ஏற்பட வாய்ப்புள்ளது. வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றவர்களின் வேலையை கூட நீங்கள் அடுத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் மேலதிகாரிகளிடம் பேசும்போது சற்று நிதானத்துடன் பேசுவதால் நல்ல பெயர் எடுக்கலாம்.

விருச்சிகம்

சக ஊழியர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள். கிடைக்கும் சிலருக்கு பயணங்கள் மூலமாக கூட ஒரு சில நல்ல பலன்கள் கிடைக்கும்.

வேலைக்கு செல்பவர்கள் சக ஊழியர்களுடன் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிக மிக சிறப்பு. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் ஓரளவு நல்ல பலன்களை அடையலாம்.

​மகரம்

நேயர்களே பேச்சு சற்று பொறுமை காப்பது அவசியம். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களுடைய அனைத்து துறைகளும் கூடிய அதிர்ஷ்டம் இன்று உள்ளது. நண்பர்கள் மூலமாகவும் சில அனுபவங்கள் அடைவீர்கள். தொழிலில் வேலையாட்களால் சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும் கூட்டாளிகளின் ஆதரவு வளமான பலனை தரக்கூடியதாக இருக்கும்.

ஒரு சிலருக்கு வெளியூர் மூலமாக கூட ஒரு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத நிலை உள்ளது கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் இருந்தாலும் அனுகூலமான பலன்களை அடைய கூடிய நாளாக இன்று இருக்கும்.

​கும்பம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய நாளாக இருக்கும். எதிலும் சற்று நிதானமாக இருப்பது அவசியம். ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கூட வீண் பதற்றம் ஏற்படலாம். எளிதில் முடியக்கூடிய செயல்கள் கூட கால தாமதம் ஆகலாம்.

தொழில் வியாபாரத்தில் இல்லாத அலைச்சல்கள் ஒருபுறம் இருந்தாலும் பணப்புழக்கம் சாதகமாகத்தான் இருக்கும். லாபகரமான பலன்களே அடையக்கூடிய நாளாக இருக்கும் இருப்பினும் வேலையாட்களின் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது.

​மீனம்

நேயர்களே உங்களுக்கு பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தி ஆகக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் இருப்பதை அனுபவிப்பதற்க்கு தடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிக மிக நல்லது. எதிலும் நீங்களே முன்னின்று செயல்பட வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படும்.