இலங்கை வரலாற்றிலையே இன்றுதான் மிக நீண்ட எரிபொருள் வரிசை! – ஆனந்த பாலித

0
596

வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசையை இலங்கை இன்று எதிர்கொண்டுள்ளது.

SUTUஇன் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித நாட்டில் உள்ள 85 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துவிட்டதாக ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

இதன்போது ஜூன் 24 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால் லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருளை விநியோகிக்கவில்லை என்று அவர் கூறினார்.

மேலும் இன்று 50 மெட்ரிக் டன் பெட்ரோல் மட்டுமே வழங்கப்பட்டதென்றும் பாலித கூறியுள்ளார்.