உலகின் வயது முதிர்ந்தவரின் பிறந்த நாள் இன்று

0
95

உலகின் வயது முதிர்ந்த நபர் தனது 112ம் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். பிரித்தானியாவின் லிவர்பூலை ஜோன் அல்பிரட் டின்னிஸ்வுட் என்ற நபர் உலகின் வயது கூடிய நபர் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

உலகில் வயது கூடிய உயிர் வாழும் நபராக அல்பிரட் கருதப்படுகின்றார். இவர் 1912ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலமான கப்பலான டைடானிக் கப்பல் மூழ்கிய ஆண்டில் அல்பிரட் பிறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றி உயிர் வாழும் வயது கூடிய நபராகவும் அல்பிரட் கருதப்படுகின்றார். என்னும் தாம் இளமையாக தம்மைக் கருதிக் கொள்வதாகவும் அதுவே நீண்ட ஆயுளின் ரகசியம் எனவும் தெரிவித்துள்ளார்.