இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் மக்கள் மனங்களில் “மிஸைல் மான்” எனப் பெயர் பெற்ற டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15 அன்று தேசிய அளவில் நினைவுகூரப்படுகிறது.
அப்துல் கலாம் அவர்கள் எளிமை, தன்னம்பிக்கை, மற்றும் நாட்டிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவமாக இருந்தார். அவர் இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் முக்கிய பங்கு வகித்ததோடு, “India 2020 – A Vision for the New Millennium” என்ற புத்தகத்தின் மூலம் இளைய தலைமுறைக்கு கனவுகளையும் கடின உழைப்பையும் ஊக்குவித்தார்.
இராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை வகித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைமை விஞ்ஞானியாக இருந்து ஏவுகணை திட்டங்களை திறம்பட செயற்படுத்தியதால் இந்தியாவின் ஏவுகணை நாயகனாக அறியப்பட்டார்.
அவர் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடுடையவர் இதனால் அவர்களோடு சுமுகமான முறையில் எப்போதும் உரையாடுவார்.
ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “டொக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம்” என பதிவிட்டுள்ளார்.
அவரது பதவில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“இளைஞர்களை தூண்டி நம் தேசத்தைப் பெரிய கனவு காணத் தூண்டிய தொலைநோக்கு பார்வையாளராக அவர் நினைவு கூறப்படுகிறார். வெற்றிக்கு பணிவும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் கனவு கண்ட இந்தியாவை வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்” என்று பதிவிட்டுள்ளார்.