காலனித்துவ தபால் நிலையங்களைப் பாதுகாக்க வேண்டும்; இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகள் விடுத்த கோரிக்கை

0
206

இலங்கையில் தங்குவதற்கு போதுமானளவு ஹோட்டல்கள் இருப்பதால் பாரம்பரியமான தபால் நிலையங்களை விற்க வேண்டாம் என வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை ஹோட்டலாக மாற்ற அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

தபால் ஊழியர்கள் இந்த விடயத்தை கண்டித்து நேற்று முன்தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அதேபோன்று எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற குழுவொன்று அந்த விடயத்தை அறிந்து நுவரெலியா தபால் நிலையத்தை விற்க வேண்டாம் என பதாதைகளை ஏந்தி எதிர்ப்பை வெளியிட்டனர்.

இலங்கைக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு போதுமானளவு ஹோட்டல்கள் இருப்பதால் இவ்வாறு வரலாற்று பாரம்பரியமிக்க இடங்களை விற்பனை செய்யக் கூடாதென அவர்கள் அரசாங்கத்துக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளனர். இது போன்ற பழமையான தபால் நிலையங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.