சீனாவின் கடனை செலுத்த இலங்கைக்கு கால அவகாசம்! வெளியான அறிவிப்பு

0
289

இலங்கை அரசாங்கம், 51 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக்கடனை மறுசீரமைக்க போராடி வரும் நிலையில், கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதை சீன அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இந்த கடன் சேவையை நீடிக்க சீனா திட்டத்தை முன்வைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியுள்ளதாக தெ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

சீனாவின் கடனை செலுத்த இலங்கைக்கு கால அவகாசம்! வெளியான அறிவிப்பு | Sri Lanka Has Time To Pay Off China S Debt

இலங்கையின் 10 சதவீத கடன்

இதன்படி, எக்ஸ்சிம் வங்கிக் கடன்களுக்கான அசல் மற்றும் வட்டியை இலங்கை செலுத்த வேண்டியதில்லை.

இந்த நிலையில், ஜப்பான் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு அடுத்தபடியாக இலங்கையின் மூன்றாவது பெரிய கடன் வழங்குனராக சீனா உள்ளது. அதாவது இலங்கையின் கடனில் சுமார் 10 சதவீதத்தை சீனா கொண்டுள்ளது.