Tiktok பெண் கணவனால் எரித்துக்கொலை; விவாகரத்து கேட்டது காரணமா?

0
30

கொழும்பு – வெல்லம்பிட்டி, லிசன்பொல பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கணவர் தனது இளாம் மனைவியை தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கணவன் – மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்ததாகவும், சந்தேக நபர் பலமுறை பெண்ணைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் ரிக்ரொக் சமூக ஊடக பிரபலமான 29 வயதுடைய இளம் தாயாவார்.

பெண்ணின் கணவர் வீட்டின் கூரையை அகற்றி வீட்டிற்குள் நுழைந்து பெட்ரோல் போத்தலைக் கொண்டு வந்து தனது மனைவியின் தலையில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

அதன் பின்னர் குழந்தைகளுக்கு தீ பரவிவிடும் என அஞ்சி அவர்களை வீட்டு கூரையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது. இதன் காரணமாக சந்தேக நபருக்கு எதிராக அவர் பொலிஸில் பல முறை முறைப்பாடுகளை அளித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

சந்தேக நபர் மது வாங்குவதற்காக அடிக்கடி அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபர் மீது அந்தப் பெண் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய கணவனை கைது செய்ய வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.