கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன ஊழியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது வைத்தியசாலையின் சிற்றூழியர்களினால் அவரது அலுவலகத்தில் வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.