வவுனியாவில் மூன்று மாம்பழங்கள் ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம்!

0
618

மூன்று மாம்பழங்களும் ஒரு மாலையும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போன நிகழ்வொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் ஆறாம்நாள் திருவிழா 21ஆம் திகதி நேற்று நடைபெற்றது.

இதன்போது அன்று இறைவனுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்டது போது கடும் போட்டிகளுக்கு மத்தியில் சபரிராஜன் என்ற மாணவன் அவற்றை ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் எடுத்துள்ளார்.

 பலரும் வியப்பு

கிராமப்புற ஆலயம் ஒன்றில் இவ்வாறு பெரிய தொகைக்கு மாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போன மூன்று மாம்பழங்கள்! | Vavunia Mango Auctioned For One Million Rupees

அதேவேளை ஏலத்தில் கிடைக்கப்பெற்ற பணம் ஆலயத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.