போலி தங்கக் காசுகளுடன் மூவர் கைது!

0
131

புதையல் மூலம் கிடைத்த விலைமதிப்பற்ற தங்கக் காசுகள் எனக் கூறி போலி தங்கக் காசுகளை மனம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கு விற்பனை செய்ய முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை , தாய் மற்றும் மகன் உள்ளிட்ட மூவர் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபரான தந்தை தப்பிச்செல்ல முற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 47,23,18 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  தந்தை , தாய் மற்றும் மகனாவர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 810 போலி தங்கக் காசுகள் , தராசு மற்றும் 6 கையடக்கத் தொலைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.