தூங்கிக் கொண்டிருந்த மூன்றரை வயதுக் குழந்தை கொலை; மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலம்!

0
491

இலங்கையில் உள்ள பகுதியொன்றில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூன்றரை வயதுக் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழந்தை கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக மீகஹதென்ன பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் மூன்று வயது குழந்தையை கொடூரமாக கொன்ற நபர்! | Man Killed A Three Year Old Child In Sri Lanka

இந்த சம்பவம் படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் தாய், மூத்த குழந்தையை பாடசாலைக்கு விடுவதற்குச் சென்ற வேளை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.