இலங்கையில் ஆயிரக்கணக்கான பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் 100இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டம் தயாரித்துள்ளது.
மறுசீரமைப்புத் திட்டம்

தேசியக் கல்வி சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் பாடசாலைகளுக்கான மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 300 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.