ஹமாஸ் பிரதித் தலைவர் இறுதிச் சடங்கில் குவிந்த ஆயிரக்கணக்கானோர்

0
273

இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த ஹமாஸ் பிரதித் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானின் பெய்ரூட்டில் ஹமாஸ் அமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் பலர் பங்கேற்ற இறுதிச் சடங்கு நடைபெற்றது.

இதன்போதுப் ஹமாஸ் போராளிகள் இறந்த சலே அல்-அரூரியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இசை, பிரார்த்தனை மற்றும் துப்பாக்கிச் சூடுகளை வாசித்தனர். அத்துடன் இந்த தாக்குதலுக்கு அவர்கள் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும், எதிர்கால நடவடிக்கைகளுக்கு லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா போராளிகளின் ஆதரவைப் பெறுவோம் என ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர்.