“இந்த அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமிக்க மக்கள் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்டது. எனவே கூட்டு எதிரணியினரின் பேரணி ஊடாக இந்த அரசை கவிழ்க்க முடியாது”என அமைச்சர் கே.டி.லால்காந்த தெரவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், ”அரசுக்கு எதிரான கூட்டு எதிரணியினரின் நுகேகொடை பேரணி வெற்றியளிக்க வேண்டும் எனப் பிராத்திக்கின்றேன். ஏனெனில் பொதுமக்களுக்கு பயனற்ற ஒன்றாக அது உள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டு எதிரணியினர் பேரணியை நடத்துவதால் பாதாள உலகக் கோஷ்டியையோ அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தையோ தடுக்க முடியாது. எனவே அது பொதுமக்களுக்கு பயனளிக்கும் ஒரு விடயமாக இருக்காது. அதிக சவால்கள் நிறைந்தது.
எனவே, பொதுமக்களுக்கு பலனளிக்காத ஒரு விடயத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். பொதுமக்களது ஆதரவு இல்லாத மேற்படி விடயத்தால் எதுவித நன்மையும் ஏற்படப்போவதில்லை. கூட்டு எதிரணியினரின் பேரணி ஊடாக இந்த அரசை கவிழ்க்க முடியாது. இந்த அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமிக்க மக்கள் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்டது என்பதை எதிரணியினர் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்றார்.



