தமிழ் மக்களுக்கும் தோனிக்கும் மொழி தடை இல்லை! – சாக்‌ஷி சிங் தோனி

0
394

மொழி என்பது தோனிக்கும், தமிழ் மக்களுக்கு தடையாக இருந்தது கிடையாது என தோனியின் மனைவி சாக்‌ஷி சிங் தெரிவித்துள்ளார்.

நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி சிங் தோனி இணைந்து தோனி என்டர்டெயின்மென்ட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.`

இரு மொழிகளில் வெளியாகும் LGM

அதில் முதல் திரைப்படமாக அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் எல்ஜிஎம் (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற தமிழ் படத்தை தயாரித்துள்ளனர்.

ஹரீஸ் கல்யாண், இவானா நடித்துள்ள ‘எல்ஜிஎம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வருகிற ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ் மக்களுக்கும் தோனிக்கும் மொழி தடை இல்லை! | There Is No Language Dhoni For Tamil People Too

இந்நிலையில் தயாரிப்பாளரான சாக்‌ஷி சிங் தோனி இதற்கான புரோமோஷன் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதோடு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்‌ஷி சிங் தோனி பல சுவாரஸ்யமான கருத்துக்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,

”மொழி என்பது தோனிக்கும் தமிழ்மக்களுக்கு தடையாக இருந்தது கிடையாது. இந்த படத்திற்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கண்டிப்பாக இந்த திரைப்படம் எல்லோருக்கும் நல்ல அனுபவத்தை கொடுக்கும்.

சமீபத்தில் தோனி படத்தை பார்த்தார். படம் நன்றாக வந்துள்ளது. எங்களுக்கு படம் பிடித்துள்ளது. தோனியை வைத்து படம் எடுத்தால் அதை ஆக்‌ஷன் படமாக எடுப்பேன் என அவர் தெரிவித்தார்.