எந்த வளர்ச்சியும் இல்லை; அனுரவை குறைகூறும் மஹிந்த ராஜபக்க்ஷ!

0
38

ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கம் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு நேற்று களுத்துறையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளியிட்டார். விஜேராம இல்லத்தில் இருந்து தங்காலைக்குச் சென்ற பின் மஹிந்த ராஜபக்‌ஷ வெளியில் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.