பிரித்தானியாவில் உயிரிழந்த உலகின் மிக வயதான பூனை! எத்தனை வயது தெரியுமா?

0
138

உலகின் மிக வயதான பூனை பிரித்தானிய நாட்டில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரித்தானியாவில் உள்ள 33 வயதான ரோஸி என்ற பூனையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளை இந்தாண்டு ஜூன் 1 ஆம் திகதி கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக பிரித்தானியாவில் உள்ள நார்விச் நகரில் உள்ள அவரது உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்துள்ளது.

33 ஆண்டுகள் வாழ்ந்த ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.